இந்தியா, பிப்ரவரி 18 -- தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகளுள் ஒன்று செம்பருத்திச் செடியில் பூக்கள் பூக்காமல், பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சிகள் ஏற்பட்டு திடீரென செடிகள் வாடி விடும். அப்போது அவர்கள் உரங்களை அதிகப்படியாக தெளித்துவிடுவார்கள். அதைத் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். அவை பூத்துக்குலுங்காமல் போக எண்ணற்ற காரணங்கள் இருக்கும் நிலையில், செம்பருத்தி பூக்களுக்கு ஏற்ற சரியான உரம் ஆகியவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மண்ணில் போதிய அளவு பாஸ்பரஸ் சத்துக்கள் இல்லையென்றாலும், பூக்கள் உற்பத்தியை அது தடுக்கும். எனவே பாஸ்பரஸ் உள்ள உரங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போது உங்களுக்கு நிறைய பூக்கள் பூக்கும்.

சில செம்பருத்தி செடிகள் நல்ல பசுமையாக வளரும். ஆனால், பூக்கள் பூக்காது. எனவே அதற்கு ஏற்ற உரங்கள் இடவேண்ட...