இந்தியா, பிப்ரவரி 15 -- சங்குப்பூக்கள் எந்த ஒரு தோட்டத்தையும் அழகாக்கும் செடியாகும். மருத்துவ குணங்களும் உண்டு. இப்போது அதன் தேநீர் பரவலாக புழக்கத்தில் உள்ளது. அதனால் அதை வீட்டிலேயே வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். இது ஊதா மட்டுமின்றி, வெள்ளை, பர்பிள், பிங்க் வண்ணங்களிலும் உள்ளது. இதில் ஒரு இதழ் அல்லது இரு இதழ்கள் உள்ளன. இது வேகமாக வளரும் கொடிவகைச் செடியாகும். இதற்கு நல்ல பராமரிப்பு தேவை. அப்போதுதான் அடர்த்தியாக வளரும். குளிர்காலம் முடியும் தருவாயில் நீங்கள் இந்தச்செடிக்கும் புத்துயிர் கொடுகக்லாம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

சூரிய ஒளி

சங்கு பூக்களுக்கு முழு சூரிய ஒளி தேவை. ஆரோக்கிய வளர்ச்சிக்கு முழு சூரிய ஒளி கிடைப்பதை உறுதியாக்குங்கள். தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை சூரிய ஒளி கிடைத்தால்தான் அது நல்ல அளவில் பூ பூக்கு...