இந்தியா, பிப்ரவரி 9 -- மழைக்காலம், கோடை காலம், குளிர் காலம் என எந்த காலமாக இருந்தாலும் அது எங்களுக்கான காலம் என்று கொசுக்கள் நம்மை நோக்கி படையெடுத்து வருவது வழக்கமான ஒன்று தான். கழிவு நேர தேங்கி நிற்பதாலும், ஆங்காங்கே வீடுகளைச் சுற்றி பல உடைந்த பொருட்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் இந்த கொசுக்கள் உருவாகின்றன. வீட்டின் ஜன்னல்களை அடைத்து வைத்தாலும் ஏதேனும் ஒரு துளை வழியாக உள்ளே நுழைந்து விடுகின்றன இந்த கொசுக்கள். நாம் இவற்றை விரட்ட கொசு வத்தி, மின்சார கொசு விரட்டி மற்றும் கொசு வலை என எத்தனை முயற்சி செய்தாலும் நம்மைத் தேடி வந்து விடுகின்றன. இந்த கொசுக்கள் முட்டை இடுவதற்கு தான் நம் இரத்தத்தை உறிஞ்சுகின்றன.

கொசுக்கள் நம்மை கடிப்பதால் டெங்கு, காலரா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் நம்மை பாதிக்கின்றன. இவை அனைத்தும் கொசு மூலமாகவே பரவுகின்றன. இதக்...