இந்தியா, பிப்ரவரி 20 -- வீட்டில் செடி வளர்ப்பது என்பது பலருக்கு பிடித்தமான காரியமாகும். பலர் அவர்களது கனவு வீட்டை கட்டும் போதே வீட்டை சுற்றி தோட்டம் அமைப்பதற்கு ஏதுவாக இடம் விட்டு கட்டுவார்கள். வீட்டை சுற்றி இடம் அமைக்க வசதி இல்லாதவர்கள் மாடியிலேயே சிறப்பான தோட்டத்தை அமைக்கலாம். வீட்டிலேயே நமது சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை கூட வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். நீங்கள் வீட்டுத் தோட்டத்தில் அழகான பூக்களை வளர்க்க வேண்டுமா? அதற்கான சில செடிகள் குறித்த தகவல் இதோ.

ஆங்கிலத்தில் இக்ஸோரா எனக் கூறப்படும் வெட்சிப்பூ உங்கள் மொட்டை மாடித் தோட்டத்தை அழகுபடுத்த சிறந்த ஒன்றாகும். இது சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு பூக்களைக் கொண்ட ஒரு புதர்செடியாகும். இதை தொட்டிகளில் வளர்த்து தரையில் நடலாம். மற்ற தாவரங்களை விட இவற்றுக்கு குறைவான பராமரிப்பு மட்...