இந்தியா, ஜனவரி 30 -- Ganja Karuppu: தமிழ் சினிமாவின் பெயர் சொல்லும் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கஞ்சா கருப்பு. பிதாமகன் படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற இவர், தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார்.

ஆனால், சினிமாவில் நல்ல நிலையில் இருந்த போதே கடனாளியாக மாறி, சொந்த வீட்டை விற்று, வாடகை வீட்டிலும் பிரச்சனைக்கு உள்ளாகி திணறி வருகிறார், இந்நிலையில், அவரின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணம் என்ன என்பது குறித்து இந்தியாகிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு கஞ்சா கருப்பு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் எப்பவுமோ நல்லா தான் இருப்பேன். 4 பேருக்கு நல்லது பண்றவன் நல்லா தான் இருப்பான். நான் தயாரிச்ச வேல்முருகன் போர்வெல்ஸ் படத்துக்கு என் வீட்டை எல்லாம் வித்து காசு போட்டேன். அந்த படம் எடுக்கும் போது நான் முட்டா...