இந்தியா, பிப்ரவரி 4 -- Game Changer OTT: குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் ஷங்கர் முதல் முதலில் நேரடி தெலுங்கு படமாக கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார். இதனால், இந்தப் படத்தின் மீது தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்த 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜனவரி 10 அன்று பொங்கல் பண...