இந்தியா, ஜனவரி 9 -- Game Changer: ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஷங்கரின் முதல் தெலுங்கு படம். இந்த கேம் சேஞ்சர் படம் நாளை ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தவும், படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தும் ஆந்திர அரசு உத்தரவிட்டது. இதனால், படக்குழுவினர் குஷியாக உள்ளனர். ஆனால், புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கு சினிமாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், தெலுங்கானாவிலும் கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட்டுகள் விலையை உயர்த்த ரேவந்த் ரெட்டி அரசு அனுமதி அளித்துள்ளது. புஷ்பா 2 பிரீமியர் ஷோவின் போது நட...