இந்தியா, மார்ச் 11 -- G.V. Prakash: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தான் நடிப்பதற்கும் இசையமைப்பதற்கும் எப்படி நேரம் ஒதுக்கி செயல்படுகிறார் என்பதை விளக்கியுள்ளார். அத்துடன் அவரது வரவிருக்கும் படங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. அஜித் ரசிகர்களை அப்டேட் கொடுத்து குஷியாக்கிய ஜி.வி. பிரகாஷ்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், சுமார் எட்டு ஆல்பங்களை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் இதில் நேரத்தை நிர்வகிப்பது குறித்து பேசினார். அப்போது, "தேவைப்படும் நேரத்தில் நான் வேலை செய்கிறேன். நான் என் வேலையைத் தள்ளிப்போடவோ அல்லது என் எந்த ஆல்பத்திலும் கடைசி நேரத்தில் வேலை செய்யவோ மாட்டேன்.

இயக்குனரின் கால அட்டவணையின்படி வேலையை முடிக்க முயற்சிக்கிறேன். ஒரு மாதத்தில், சுமார் 15 நாட்...