இந்தியா, பிப்ரவரி 7 -- ப்ளுபெரியில் வைட்டமின் சி, கே, மேங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. இதய ஆரோக்கியம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்தப் பழத்தை நீங்கள் எந்த உணவுடன் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் ஃபுட் உணவில் உள்ளது. இதில் உள்ள எண்ணற்ற சத்துக்களுக்காக நீங்கள் உங்கள் இந்த ப்ளூபெரிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நெல்லியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் நெல்லியில் 400 மில்லி கிராம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்களுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கிவியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் கிவியில் 40.3 மைக்ரோகிராம் வைட்டமின...