இந்தியா, பிப்ரவரி 16 -- ஃப்ரைட் ரைஸ் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான ஃப்ரைட் ரைஸ் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஃப்ரைட் ரைஸ் அதிகம் பிடிக்கும் என்றால் இப்படி ஒரு சுவையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். நீங்கள் மீண்டும், மீண்டும் சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள். இது ரெஸ்டாரென்ட் சுவையைத் தரும். ஆனால் ரெஸ்டாரன்ட்களில் சேர்க்கப்படும் பொருட்கள் தேவையில்லை. இதோ ரெசிபி.

சோயா சங்க்ஸ் - ஒரு கைப்பிடியளவு (சூடான நீரில் ஊறவைத்துவிட்டு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்)

பன்னீர் - 100 கிராம் (சிறிய சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்)

பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்)

முட்டைக் கோஸ் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

கேரட் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவ...