இந்தியா, பிப்ரவரி 17 -- சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற "பாராநார்மல் ஆக்டிவிட்டி" மற்றும் "தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்" போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க இதுவே சரியான நேரம். ஆம், ஃபவுண்ட் ஃபுட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்ட இதுபோன்ற திரைப்படங்கள் பலத்தரப்பட்ட ரசிகர்களுக்கு சுவாரசியமான திரை அனுபவத்தை வழங்கியுள்ளன.

இந்த மாதிரி எடுக்கப்படும் திரைப்படங்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமாவும் இந்த அற்புத ஜானரில் இணைந்துள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தின் லுக்குகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ப...