இந்தியா, மார்ச் 12 -- பாலில் இருந்து வெண்ணெய் எடுக்கப்பட்டு அதிலிருந்து நெய் உருவாக்கப்படுகிறது. நெய்யானது உணவின் சுவையை மெருகேற்றுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நெய் அரிசி சோறு முதல் இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் உணவுகள் வரை என அனைத்திலும் சேர்த்து ருசித்து சாப்பிடக்கூடியதாக உள்ளது. நெய்யின் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் விதமாக உள்ளது.

சுத்தமான நெய் ஆரோக்கிய கொழுப்புகளை கொண்டிருக்கிறது. இது சீரான செரிமானத்துக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இதில் வேறு பொருள்கள் எதுவும் கலப்படம் செய்யப்பட்டால் அதன் தரம் அப்படியே குறைந்துவிடும். வீட்டில் இருக்கும் பாலை வைத்து நெய்யை பலரும் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. அத்துடன் கடைகளிலும் நெய் வாங்கி பலரும் ...