இந்தியா, மார்ச் 16 -- Fire Movie OTT Release: பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு படம் எனக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ஃபயர்.

இந்தப் படம் கன்னியாகுமரியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களை மையப்படுத்தி உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது என இப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே கூறினார்.

மேலும் படிக்க: அடல்ட் கண்டென்ட் பிளஸ் மெசேஜ்.. ஃபயர் திரைப்படம் குறித்து பேச்சு

இந்தப் படத்தில் பிக்பாஸ் பாலாஜி, ரக்ஷிதா மகாலட்சுமி, சாந்தினி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது. அதன்படி, ஃபயர் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்...