இந்தியா, பிப்ரவரி 8 -- நீங்கள் சாப்பிடும் உணவில் நார்ச்சத்துகளும் இருக்கவேண்டும். அது உங்களின் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானதாகிறது. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களுக்கு செரிமான ஆரோக்கியம் மட்டுமின்றி, குடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் என அனைத்துக்கும் உதவுகிறது. இங்கு நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இது உங்கள் உடலின் வளர்சிதைக்கு உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவின் அங்கமாகவும், உங்களுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வழிவகுக்கிறது.

100 கிராம் ப்ராக்கோலியில் 2.6 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள...