இந்தியா, பிப்ரவரி 15 -- FD Interest Rates: நிரந்தர வைப்புத்தொகைக்கு (FD) இந்த 6 வங்கிகள் அதிக வட்டி வகிதத்தை வழங்குகின்றன. இதுகுறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்ததால், வங்கிகளும் அதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.

எனவே, வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கு (fixed deposits) வழங்கும் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், வங்கிகள் இதுவரை தங்கள் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை குறைக்கவில்லை. எனவே, உங்கள் நிதிகளில் சிலவற்றை FD-க்கு ஒதுக்க விரும்பினால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் அதைச் செய்யலாம்.

பொதுவாக, வங்கிகள் தங்கள் நீண்ட கால நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டிய...