இந்தியா, பிப்ரவரி 24 -- ஆங்கிலேயர் அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும், ஆங்கிலம் உலக மொழியானதற்கும் தட்டச்சு அதாவது டைப்ரைட்டர் ஒரு முக்கிய காரணம். 1872ம் ஆண்டு ரெமிங்டன் டைப்ரைட்டர் விற்பனைக்கு வந்தபோது வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் அதை வாங்கி உபயோகிக்க முன்வந்தன. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன.

அதனால் ஆங்கில தட்டச்சில் அதை வடிப்பது எளிதாக இருந்தது. ஆனால் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1 என 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழிக்கு எப்படி தட்டச்சை கொண்டுவருவது என்பது குழப்பமாக இருந்தது.

மேலும் தமிழில் இன்னும் சில சமஸ்கிருத எழுத்துக்களும் பயன்படுத்தப்படும். மேலும் அதில் உள்ள குறியீடுகள் வடமொழிகள் மூலம் வந்த கிரகந்த எழுத்துக்கள் என அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எப்படி தட...