இந்தியா, பிப்ரவரி 5 -- Exit poll : டெல்லி சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவுக்கு பிந்தய கருத்து கணிப்பு நிலவரங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை விட பாஜக முன்னிலை வகிக்கும் என்று பல கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு டெல்லி சட்டமன்றத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வாக்காளர்கள் வாக்களித்த பிறகு அவர்களுடன் நேர்காணல் செய்து, தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிடும் கணிப்புகளே எக்ஸிட் போல்கள் ஆகும். இவை உண்மையான முடிவுகளிலிருந்து பரவலாக வேறுபடலாம்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை 36. தற்போது, ஆம் ஆத்மி கட்சி...