சென்னை,கோவை,மதுரை,சேலம், மார்ச் 13 -- Exclusive : பெண் குழந்தைகள் வைத்திருப்போருக்கு பயனுள்ள திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம். தொடக்கத்தில் பயங்கர ஆர்வத்தை தந்த இத்திட்டம் இப்போது எப்படி இருக்கிறது? அதன் பயன் என்ன? அத்திட்டம் மீதான எதிர்பார்ப்பு என்ன? அத்தனையையும் அலசி ஆராய்கிறது இந்த கட்டுரை. முன்னாள் அஞ்சலக அதிகாரியும், சமூக ஆர்வலருமான சேர்முக பாண்டியன், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார்.

பெண்குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்திட , அவர்களின் கல்வியை மேம்படுத்திட பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ என்ற பெயரில் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சின் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பெண்களின் கல்வியை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட சுகன்யா சம்ருத்தி யோஜனா என...