இந்தியா, மார்ச் 6 -- நமது உடலில் அதிமான வியர்வை வெளிவருவதற்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது, நம்முடைய தசைகள் அதிகமாக வேலை செய்கிறது. அப்படி அதிகமாக வேலை செய்வதற்கு, நமது உடலுக்கு சக்தி தேவையல்லவா?

இந்த சக்தியை கொடுக்கக் கூடியது தான் ATP (Adenosine triphosphate). இவை நம்முடைய தசைகளில் இருந்து உருவாகும். ஒவ்வொரு செல்லிலும் உருவாகக்கூடிய இந்த ATP, அதிகமான வெப்பத்தை வெளியேற்றும். இந்த வெப்பம் வெளியேறுவதற்கு நமது உடல் செய்யக்கூடிய செயல்முறைதான் வியர்வை வெளியேற்றம்.

பொதுவாக, நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடலில் காய்ச்சல் இருக்கும் பொழுது, பயப்படும் பொழுது, காரமான பொருட்களை சாப்பிடும் பொழுது வேர்வையானது வெளியேறும்.

நமத...