இந்தியா, பிப்ரவரி 25 -- சில நாட்களில் உயர் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. மாணவர்கள் மும்முரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மானவர்களோடு பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இனிவரும் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். படிக்கும் மாணவர்கள் மனதில் பலவிதமான கேள்விகள் எழலாம். எப்படி படிப்பது, எதை படிப்பது என இவை நீண்டுக் கொண்டே இருக்கும். ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் முறையில் மாணவர்கள் படிப்பதை முக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் காலை அல்லது மாலை எந்த நேரம் படிப்பதற்கு சரியான நேரம் என்ற குழப்பம் இருக்கும். இது குறித்து ஊடகங்களில் பல பரிந்துரைகள் உலா வருகின்றன. அதில் சில குறித்து இங்கு காண்போம்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மூளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை...