இந்தியா, பிப்ரவரி 21 -- தேர்வு பருவம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. அதனைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடக்கும். இது போன்ற சமயத்தில் மாணவர்கள் மீது அதிக அழுத்தம் உள்ளது. அதுவும் உயர் வகுப்பு மாணவர்கள் எப்படியாவது பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற வேண்டும் என படிக்கின்றனர். ஆனால் இந்த சமயத்தில் நாம் அதிகமாக பதட்டப்பட்டு செய்யும் சிறு தவறும் பெரிய விளைவுகளை கொடுக்கும். எனவே நிதானமாக நேர்மறை எண்ணங்களோடு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் உணவு முறையை நிர்வகிக்க சில ஐடியாக்களை இங்கு கொடுத்துள்ளோம்.

நீர் நம் உடலில் உள்ள வேதியியல் எதிர்வினைகளை துரிதப்படுத்துகிறது மற்றும் நமது மூளை தகவல்களை செயலாக்கும் விகிதத்தை விரைவுபடுத்துகிறது. ஏனெனில் உடலில் ஏற்...