இந்தியா, பிப்ரவரி 7 -- ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போது நடைபெற்ற தேர்தலில் 6.72 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 2023ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்...