இந்தியா, பிப்ரவரி 5 -- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 05) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் தான் முறையிட்ட போது அதிகாரிகள் ஒழுங்கா பதில் சொல்லவில்லை என அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். என்னுடைய கையில் தான் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால், என்னுடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டதாக கூறுகிறார்கள் என்றும் தனக்கு வாக்குரிமையை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பெண் ஒருவர் இவ்வாறு புகார் அளித்தது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இள...