இந்தியா, பிப்ரவரி 1 -- ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிக, பாமக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் திமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். இன்னும் சில நாள்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தல் களம் சூட...