இந்தியா, பிப்ரவரி 2 -- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அவர்கள் இருவருக்குப் பிறகும் தி.மு.கழகம் எத்தனையோ இடைத்தேர்தல் களங்களைச் சந்தித்திருக்கிறது. தற்போது நடைபெறக்கூடிய ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன் அவர்கள். அவருடைய அகால மரணத்தை...