இந்தியா, பிப்ரவரி 3 -- ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை ஓய்ந்து உள்ள நிலையில் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன..

இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி நிறைவடைந்தது, 21ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பதிவான வாக்குகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்...