இந்தியா, மார்ச் 29 -- தவெக கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் போட்டி என விஜய் கூறி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் "2026ல் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் நேரடி போட்டி. தவெக தலைமையில் உண்மையான மக்களாட்சி மலரும். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாப்போம். மக்களுக்கான அரசியலை யாராலும் தடுக்க முடியாது," என்று கூறினார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்த்யாளர்கள் கேள்வி எழுப்பினர்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், "திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி" என்று கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அதிமு...