இந்தியா, பிப்ரவரி 13 -- எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் வைக்கவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையைன் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.

மேலும் படிக்க: 'எகிறி அடிக்கும் திமுக! பூஜ்ஜியம் ஆகும் பாஜக, அதிமுக! குறுக்க இந்த விஜய் வேற!' இந்தியா டுடே கருத்து கணிப்பு!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற...