இந்தியா, பிப்ரவரி 17 -- வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை மேற்பார்வையிட்டு செய்து முடிப்பதற்காக, மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மேலும் படிக்க: Sengottaiyan: செங்கோட்டையன் வைத்த கோரிக்கை! உடனே நிறைவேற்றிய முதல்வர்! நடந்தது என்ன?

2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமை...