இந்தியா, மார்ச் 27 -- "அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தாமாக முன் வந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையெனில் அவமரியாதையை சந்திப்பார்" என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் இணைப்பது சாத்தியமில்லை, பிரிந்தது பிரிந்ததுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஓபிஎஸ் பதில் அளித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் சேதம் ஏற்படுத்தியதாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஓ.பி.எஸ். திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "அவர்கள் தவறான ஒரு பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். நாங்கள் தலை...