இந்தியா, மார்ச் 25 -- EPS Delhi Visit: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டெல்லிக்கு விசிட் அடித்திருக்கிறார். இந்தப் பயணம் குறித்து அதிமுக தரப்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை.

டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் ...