இந்தியா, ஏப்ரல் 7 -- அதிமுக விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து ஏன் பேசுவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இருந்த நிலையில் "யார் அந்த தியாகி?" என்ற பேட்ஜ்களை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

கேள்வி நேரம் உள்ளிட்ட விவாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்களும் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு...