இந்தியா, பிப்ரவரி 5 -- EPS: திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா?; தவறு செய்தால் காவல் துறை கண்டுகொள்ளாதா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? "போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தை...