இந்தியா, பிப்ரவரி 9 -- Enkan Murugan: மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது இறை பக்தியை விடாமல் மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சிவபெருமான் மீது அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் எந்த அளவிற்கு பக்தி வைத்திருந்தார்களோ அதே அளவிற்கு முருக பெருமான் மீதும் பக்தி கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்த வருகின்றார். தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முருக பெருமானுக்கு கோயில்கள் கட்டாயம் இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.

நமது தமிழ்நாட்டில் அறுபடை வீடு கொண்டு முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என...