இந்தியா, மே 3 -- Empty Stomach : காலையில் எழுந்தவுடன் நம்மிடையே பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. பல் விலக்கி முகம் கழுவிய கையுடன் வெறும் வயிற்றில் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அந்த மாதிரி பழக்கம் இருக்கும் பட்சத்தில் கட்டாயம் மாற்றி கொள்ள வேண்டும். அதேபோல் நம்மில் பலருக்கு குறிப்பாக வெறும் வயிற்றில் எந்த பழ ஜூஸூம் குடிப்பது நல்லதல்ல என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழச்சாறுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்ற போதிலும் கூட அதற்கும் சில நேரகாலம் உண்டு. ஆனால் வெறும் வயிற்றில் பழச்சாறுகளை குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அதையும் அவசியம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

வெறும் வயிற்றில் பழச்சாறுகளை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள நம்முடைய சர்க்கரையின் ...