இந்தியா, பிப்ரவரி 16 -- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். எனவே நாமும் அன்றாட உணவில் அதிகமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது சமையலில் இருக்கும் காய்கறிகளில் முக்கியமான ஒரு காய்கறி தான் கத்தரிக்காய். ஆனால் இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இது சாப்பிடுவதற்கு சற்று மழுப்பான சுவையில் இருக்கும். சிலருக்கு அலர்ஜி தொந்தரவுகள் இருப்பதால் கத்தரிக்காய் சாப்பிடுவதில்லை. ஆனால் மற்றவர்கள் தாராளமாக கத்தரிக்காய் சாப்பிடலாம். கத்தரிக்ககாயில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. கத்தரிக்காயை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இத்தகைய கத்தரிக்காயை வைத்து சுவையான கூட்டு செய்யலாம். இதனை மதிய உணவிற்கு இணை உணவாக வைத்து சாப்பிடலாம். இதை எளிமையாக செய...