இந்தியா, ஜனவரி 31 -- பொதுவாக சேமியாவில் கிச்சடி செய்தால் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதுபோல் முட்டை சேர்த்து பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இதை நீங்கள் லன்ச் பாக்ஸ்களுக்கு கட்டிக்கொடுத்துவிட்டால், அது காலியாகிவிடும். அத்தனை சுவையானதாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இந்த முட்டை, சேமியா பிரியாணி இருக்கும். இதை செய்வது எளிது. எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* முட்டை - 2

* மிளகாய்த் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - கால் ஸ்பூன்

(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி, அதில் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* பட்டை - ஒரு சிறிய துண்டு...