இந்தியா, ஏப்ரல் 10 -- ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் முட்டை மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முட்டை சைவம், அசைவம் என்பதை கடந்து அனைவராலும் விரும்பு சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவாக இருக்கும் முட்டையை, வளரும் குழந்தைகள் நாள்தோறும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நாம் சாப்பிடும் உணவில் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதில் முட்டைக்கு தனியொரு இடம் உண்டு. முட்டை சாப்பிடுவதால் நினைவாற்றல் மேம்பாடு அடைவது, மூளை மற்றும் தசை வளர்ச்சி அடைவது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, பார்வை திறன் மேம்படுவது என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், குறிப்பாக வைட்டமின் ஏ, பி12, பி2, பி5 போன்றவையும், பல்வேறு வகையான தாதுக்கள், கனிமை சத்துக்களும் நிறைந்துள்ளன.

முட்டையி...