இந்தியா, ஏப்ரல் 9 -- தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி தி.மு.க எம்.பியுமான அருண் ஆகியோரை குறிவைத்து அதிரடி சோதனையில் இறங்கி இருக்கிறது அமலாக்கத்துறை. இவர்களுக்கு சொந்தமான சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் நேருவின் சகோதரி உமா மகேஸ்வரி மற்றும் டி.வி.எச் நிறுவன முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ரவிச்சந்திரனின் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | RIP Kuma...