இந்தியா, ஜனவரி 30 -- ECR Incident, Thol.Thirumavalavan: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருவது தொடர்பாகவும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், "இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது; அதற்கு அந்த கட்சி பொறுப்பாக முடியாத...