இந்தியா, பிப்ரவரி 2 -- ECR: ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன் பற்றி அறிவோம்.

சென்னை ECR சாலையில் பெண்கள் பயணித்த காரை சில இளைஞர்கள் வழிமறித்த விவகாரம் தமிழ்நாடெங்கும் பகீர் கிளப்பியது.

இந்நிலையில் ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சார்ந்தவர் எனவும், கைது செய்யபட்டவர் பயணித்த கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருடைய சகோதரர் மகனுக்குச் சொந்தமானது எனவும்; இதன்மூலம், ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சமூக ஆர்வலரும் நடிகையுமான வினோதினி வைத்தியநாதன், தமிழக அரசு இயந்திரத்தினை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்துள...