இந்தியா, ஏப்ரல் 13 -- ஈஸ்டர் ஞாயிறு 2025: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கிறிஸ்துமஸ் போலல்லாமல், தனித்த முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு நிலையான தேதி எதுவும் இல்லை.

இது வசந்த காலத்தில் வருகிறது. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி நாளில் இருந்து, மூன்றாம் நாள் புனித ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு புனித ஞாயிறு என்னும் ஈஸ்டர் ஞாயிறு வரும் ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். கிறிஸ்தவ நாட்காட்டியின்படி, ஈஸ்டர் ஞாயிறு பொதுவாக பௌர்ணமிக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி ஏப்ரல் 12 அன்று கொண்டாப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று குருத்து ஓலை ஞாயிறாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதிருந்து, ஈஸ்டர...