இந்தியா, பிப்ரவரி 25 -- Earthquake: வங்காள விரிகுடாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6:10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம் பூரி அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் 91 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கம் அட்சரேகை 19.52 N மற்றும் தீர்க்கரேகை 88.55 E இல் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கொல்கத்தா மக்களிடையே தற்காலிக பீதியை ஏற்படுத்திய போதிலும், சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எத...