இந்தியா, ஜனவரி 28 -- விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கும் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இடஒதுகீட்டுக்காக தியாகம் செய்த 21 பேருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி தரப்பட்டு உள்ளது. அண்ணன் ஏ.கோவிந்தசாமி அவர்களை பற்றி இந்த மாவட்டத்தில் அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் 'ஏ.ஜி' என்ற இரண்டு எழுத்துக்கு தனி மரியாதை உண்டு. அரசியலில் கரைபடாத கரம், மாசற்ற மனம், எவரிடத்திலும் மரியாதை காட்டுகின்ற பண்பு, கழக கொள்கையில் பற்று, அண்ணாவிடத்தில் பக்தி, கலைஞரிடத்தில் நம்பிக்கை, கழகத் தோழரிடத்தில் ...