இந்தியா, மார்ச் 22 -- ஹாலிவுட் உலகம் படைக்கும் கிராஃபிக்ஸ் விருந்தின் மற்றொரு படைப்பாக களம் இறக்கப்பட்டிருக்கிறது டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் திரைப்படம்.

ஹாலிவுட் ரசிகர்களுக்காக வருகிற மார்ச் ( 31 -03 -2023) ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் பிரேத்யக காட்சி அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. ஆக படத்தின் கதை என்ன? படம் என்ன ஜானர்? திரையரங்கம் சென்று பார்க்கும் அளவுக்கு படம் ஒர்த்தா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இங்கு பார்க்கலாம்.

கதையின் கருவிற்கு செல்லும் முன்னர் படத்தில் இடம் பெறும் ஒரு கேமை பற்றி சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் என்பது வீட்டிற்குள் விளையாடப்படும் ஓர் விளையாட்டு. மேசையைச் சுற்றி வீரர்கள் அமர்ந்து இருப்பர். அதில் இருக்கும் ஒருவர் விளையாட்டின் மாஸ்டராக இருப்பார். மற்ற வீரர்கள் அனைவர...