இந்தியா, பிப்ரவரி 19 -- நாம் என்னதான் பெரிய பெரிய உணவகங்களிலும், பைவ் ஸ்டார் ஹோட்டல்களிலும் சாப்பிட்டு இருந்தாலும் நமது வீட்டில் கிராமங்களில் செய்யப்படும் உணவுகளின் சுவைக்கு ஈடான சுவை எங்கும் கிடைக்காது. அந்த அளவிற்கு கிராமத்து சமையலில் கமகமக்கும் மணமும் நமது மனதை இந்த உணவு இழுக்கிறது. கிராமத்து சமையலில் பயன்படுத்தப்படும் மசலாக்கள் எப்பொழுதும் தனித்துவமான மசாலாக்களாகவே உள்ளன. நாம் சாதாரணமாக பயன்படுத்தி மசாலாக்களையே அவர்கள் சரியான விகிதத்தில் பயன்படுத்தும் போது உணவின் சுவை கூடுகிறது. இந்த அளவிற்கு தமிழ்நாட்டின் கிராம சமையலுக்கு பல இடங்களில் அதிக வரவேற்பு உள்ளது. கிராமங்களில் சமைக்கப்படும் அசைவ உணவுகளில் பிரதான உணவாக இருப்பது கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாகும் குறிப்பாக ஆறு மற்றும் கடல் இருக்கும் பகுதிக...