இந்தியா, ஜனவரி 29 -- காபி மிகவும் பிரபலமான பானமாகும், சில நாடுகளில் தண்ணீருக்கு அடுத்தபடியாக குடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது. அதிலும் நமது வீடுகளில் காலை எழுந்ததும் காபி குடித்த பின்னரே அந்த நாளை தொடங்குகின்றனர். அந்த அளவிற்கு நம்மில் பலர் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். காபி காலை சோம்பலை எளிதாக போக்குகிறது. அடுத்த வேலையை பார்க்க வைக்கிறது. ஆனால் தினமும் வெறும் வயிற்றில் காபி குடிப்பதில் சில பிரச்சனைகளும் உள்ளன. இந்த பழக்கம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவும் செய்கிறது. பலர் காலையில் காபி குடிப்பதை முதலில் விரும்புகிறார்கள். இருப்பினும், சிலர் அதை வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகின்றனர்.

காலையில் காபி குடிப்பது நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். காபியில் ...