இந்தியா, பிப்ரவரி 16 -- Dragon: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, 'ஓ மை கடவுளே' படத்துக்குப் பின், 'டிராகன்' என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டிராகன் படம் குறித்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, கலாட்டா பிளஸ் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கநாதன் அவரிடம் நேர்காணல் செய்திருக்கிறார். அதன் தொகுப்பினைப் பார்க்கலாம். அவையாவன:

அது என்னுடைய குறும்படம் எடுத்த நாட்களில் எனக்கு கிடைத்தது. நாளைய இயக்குநர் என்கிற ரியாலிட்டி ஷோ தந்தது. கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்ற சீசனுக்கு அடுத்த சீசன் நான் பங்கேற்றேன். மடோன் அஸ்வின், எட்டு தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ்...