இந்தியா, ஏப்ரல் 8 -- தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம். எஸ். பாஸ்கர், சுனில் ரெட்டி, முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஃபேண்டஸி ஜானரில் உருவான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

கதையின் கரு:

நாயகன் தீரஜ், சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தனது தாய், தந்தையை இழந்து விடுகிறார். அந்த விபத்தில் தீரஜிற்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு விட, அது மறையாத தழும்பாக அவரது முகத்தில் இருந்து விடுகிறது. இந்த நிலையில் அந்த முகத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார் தீரஜ்.

இதற்கிடையே, படத்தில் பிரபல வில்லனான மன்சூர் அலிகானின் மகளாக வரும் ஸ்மிருதி வெங்கட்டின் மீது தீரஜிற்கு காதல் முளைக்கிறது. ஆனால் இந்த காதலை ஸ்மிருதி ஏற்க மறுக்கிறார்

வாழ்க்கையே ...