இந்தியா, மார்ச் 31 -- நரிக்குச் சாயம் வெளுத்து, ராஜா வேஷம் கலைந்தது போல் தவெக தலைவர் விஜய்யின் வேஷமும் கலையும் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறி உள்ளார்.

நாமக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தவெக தலைவர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து உள்ளார் "புதுசா கட்சி ஆரம்பிச்சு, அவர் தமிழ்நாட்டையே உட்கார்ந்து ஆளுற மாதிரி நினைச்சுக்கிட்டு இருக்காரு. சாயப்பட்டறையில விழுந்த நரி ப்ளூ கலர்ல ஆயிருச்சு. காட்டுக்குள்ள வந்த அந்த நரியைப் பார்த்து, விலங்குகள் எல்லாம் 'ராஜாடா, ராஜாடா'ன்னு பயந்து நடுங்க ஆரம்பிச்சிருச்சு. ஆனா, மழை பெஞ்சு சாயம் வெளுத்துப் போச்சு. அப்போ விலங்குகள் எல்லாம் நரியைக் கடிச்சு குதறி தூக்கி எறிஞ்சிருச்சு. நரிக்குச் சாயம் வெளுத்து, ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு," என்று உருவகமாகக் ...